கர்நாடக அணைகளில் இருந்து வரும் நீரால், மேட்டூர் அணையின் நீர் மட்டம் இன்று மாலை 101.02 அடியை எட்டியது.
அணையின் நீர்மட்டம் 100 அடியை தாண்டிவிட்டதால் டெல்டா பாசனத்திற்காக அணையில் இருந்து தண்ணீ திறந்துவிடப்பட உள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
கர்நாடக மாநிலத்தின் காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் கன மழை பெய்து வருகிறது. இதனால் அம்மாநிலத்தில் உள்ள ஹேமாவதி, கிருஷ்ணராஜசாகர், கபினி ஆகிய அணைகள் நிரம்பி வருகின்றன, இந்த அணைகளின் பாதுகாப்பு கருதி அதிலிருந்து உபரி நீர் திறந்து விடப்படுகிறது.
உபரி நீர் காவியில் பெருக்கெடுத்து வருவதால் மேட்டூர் அணையின் நீர் மட்டம் படிப்படியாக உயர்ந்து இன்று காலை 101.020 அடியை எட்டியது. அதே நேரத்தில் நேற்று முன் தினம் வரை 45,000 கன அடியாக இருந்த நீர் வரத்து, இன்று காலை நிலவரப்படி 32,127 கன அடியாக குறைந்துவிட்டது. அணையில் இருந்து வினாடிக்கு 2,000 கன அடி நீர் திறந்துவிடப்பட்டு வருகிறது.