காமராஜர் பிறந்தநாள் : தலைவர்கள் மாலை!

Webdunia

ஞாயிறு, 15 ஜூலை 2007 (18:03 IST)
பெருந்தலைவர் காமராஜரின் 105வது பிறந்தநாள் கல்வி வளர்ச்சி நாளாக தமிழகம் முழுவதும் இன்று கொண்டாடப்பட்டது!

தமிழக காங்கிரஸ் கட்சி தலைமையகமான சத்தியமூர்த்தி பவனில் காங்கிரஸ் கட்சி மாநிலத் தலைவா எம். கிருஷ்ணசாமி தலைமையில் பெருந்தலைவர் காமராஜர் உருவப்படத்திற்கு மாலை அணிவிக்கப்பட்டு மரியாதை செலுத்தப்பட்டது. அதன்பிறகு மக்களுக்கு வேட்டி, புடவை, மாணவர்களுக்கு நோட்டு, புத்தகங்கள், நலிந்தோருக்கு தொழிற்கருவிகள் வழங்கப்பட்டது.

சென்னை அண்ணா சாலையில் உள்ள காமராஜர் சிலைக்கும், அவரது உருவப்படத்திற்கும் அமைச்சர் ஆர்க்காடு வீராசாமி தலைமையில் தி.மு.க.வினர் மாலை அணிவித்தனர்.

தியாகராயநகரில் உள்ள காமராஜர் நினைவு இல்லத்தில் உள்ள திருவுருவச் சிலைக்கு மத்திய அமைச்சர் ஜி.கே. வாசன் தலைமையில் மாலை அணிவிக்கப்பட்டது.

மேலும் தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த், நடிகர் சரத்குமார் ஆகியோரும் காமராஜர் உருவப்படங்களுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

காமராஜரின் பிறந்தநாளையொட்டி பள்ளி விடுமுறை நாளான இன்று வேலை நாளாக அறிவிக்கப்பட்டிருந்தது. அனைத்து அரசு பள்ளிகளிலும் மாணவர்கள் ஆர்வத்துடன் கலந்துகொண்டு காமராஜரின் பிறந்தநாள் விழாவினை சிறப்புறக் கொண்டாடினர்.

வெப்துனியாவைப் படிக்கவும்