மேட்டூர் அணை நீர் மட்டம் 99 அடியாக உயர்வு!

Webdunia

ஞாயிறு, 15 ஜூலை 2007 (13:31 IST)
மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு அதிகரித்ததையடுத்து அணையின் நீர்மட்டம் 100 அடியைத் தொடவுள்ளது!

கர்நாடக மாநிலத்தில் தொடர்ந்து பெய்துவரும் கன மழையை அடுத்து கிருஷ்ணராஜ சாகர், கபினி அணைகள் நிரம்பின. இதனையடுத்து அணைக்கு வரும் நீர் அப்படியே திறந்துவிடப்படுகிறது.

இதனால், மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு இன்று காலை நிலவரப்படி 41,662 கன அடியாக இருந்தது. அணையின் நீர் மட்டம் 99,030 அடியாக உயர்ந்துள்ளது என்றும், அணையில் இருந்து 2000 கன அடி நீர் திறந்துவிடப்படுவதாகவும் பொதுப் பணித்துறை வட்டாரங்கள் கூறியுள்ளன. (யு.என்.ஐ.)

வெப்துனியாவைப் படிக்கவும்