மேட்டூர் அணையின் நீர் மட்டம் உயர்வு: நீர் வரத்து குறைவு

Webdunia

திங்கள், 9 ஜூலை 2007 (15:12 IST)
மேட்டூர் அணையின் நீர் மட்டம் இன்று காலை நிலவரப்படி 86.3 அடியாக உயர்ந்துள்ளது. அணையின் நீர் மட்டம் உயர்ந்துள்ள போதியிலும் அணைக்கு வரும் நீர் வரத்து 28,192 கன அடியாக குறைந்துள்ளது.

கர்நாடக மாநிலத்தின் நீர் பிடிப்பு பகுதிகளில் தென் மேற்கு பருவ மழை தீவிரமடைந்துள்ளது. இதனால் அங்குள்ள கபினி, கிருஷ்ணராஜ சாகர் உள்ளிட்ட அணைகள் நிரம்பி வருவதால், அந்த அணைகளில் இருந்து திறக்கப்பட்டும் உபரி நீர் தமிழகத்தில் உள்ள மேட்டூர் அணைக்கு வருகிறது.

இதனையடுத்து, மேட்டூர் அணையின் நீர் மட்டம் உயர்ந்து வருகிறது. நேற்று மாலை 84.95 அடியாக இருந்த நீர் மட்டம் இன்று காலை நிலவரப்படி 86.3 அடியாக உயர்ந்துள்ளது. எனினும், நீர் வரத்து வெகுவாக குறைந்துள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்