காவிரியில் இருந்து வரும் நீரின் அளவு அதிகரித்து வருவதை அடுத்து மேட்டூர் அணையின் நீர்மட்டம் இன்று காலை நிலவரப்படி 84.120 அடியாக உயர்ந்துள்ளது.
மேட்டூர் அணையின் முழு நீர் கொள்ளளவு 120 அடியாகும். கடந்த சில நாட்களாக காவிரியில் இருந்து அணைக்கு வரும் நீரின் அளவு அதிகரித்ததைத் தொடர்ந்து அணையின் நீர்மட்டமும் வேகமாக உயர்ந்து வருகிறது.
அணைக்கு வினாடிக்கு 27,465 கன அடி நீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து வினாடிக்கு 2,000 கன அடி வீதம் தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளது.
அணையின் நீர்மட்டம் உயர்ந்து வருவது, மேட்டூர் அணையின் நீரை நம்பியிருக்கும் விவசாயிகளுக்கு பெரும் மகிழ்ச்சியை அளித்துள்ளது.