வசதியான குடும்பங்களிலும் பெண் கொடுமை!

Webdunia

சனி, 7 ஜூலை 2007 (18:38 IST)
வசதியான குடும்பங்களிலும் பெண்களுக்கு கொடுமை நடக்கிறது என்று மேயர் சாருபாலா கூறியுள்ளார்.

பன்னாட்டு இன்னர் வீல் சங்க 321வது கிளப் நிர்வாகிகள் கூட்டம், திருச்சியில் நடைபெற்றது. இதில் 27 கிளப்புகளை சேர்ந்து நிர்வாகிகள் கலந்து கொண்டனர். 321 இன்னர் வீல் கிளப் தலைவியாக மதுரையை சேர்ந்த ருகிராணி பதவி ஏற்றார்.

இதில் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற மேயர் சாருபாலா ஆர்.தொண்டைமான் பேசம் போது, தமிழகத்திலேயே திருச்சியில் தான் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிமகமாக பதிவாகிறது. ஏழை நடுத்தர குடும்பத்தில் மட்டுமல்ல, வசதியான குடும்பத்ததிலும் பெண்கள் கொடுமைக்கு ஆளாகிறார்கள் என்று கூறினார்.

குழந்தைகளை நன்றாக படிக்க வைக்கும் பொற்றோரை முதியோர் இல்லத்திற்கு அனுப்பிவிட்டு, பிள்ளைகள் வெளிநாட்டிற்கு சென்றுவிடும் நிலை மாற வேண்டும் என்றும் பேசினார்.

வெப்துனியாவைப் படிக்கவும்