கூட்டுறவு சங்கத் தேர்தல் தொடங்கியது

Webdunia

சனி, 7 ஜூலை 2007 (11:17 IST)
கூட்டுறவு சங்கங்களுக்கு முதல் கட்டமாக 5,939 சங்கங்களுக்கு இன்று தேர்தல் நடைபெறுகிறது.

தமிழகத்தில் பத்து ஆண்டுகளுக்கு பிறகு கூட்டுறவு சங்க தேர்தல்கள் நடத்தப்படுகின்றன. இன்று முதல் நவம்பர் மாதம் 11 ஆம் தேதி வரை 5 கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது.

தொழில் வணிகத்துறை, மீன் வளத்துறை, கதர் கிராமத்துறை, பால் வளத்துறை, விவசாயத்துறை, உள்ளிட்ட 14 துறைகளில் உள்ள கூட்டுறவு சங்களுக்கு தேர்தல் நடக்கின்றன.

கூட்டுறவு சங்கங்களில் போட்டின்றி பலர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். பதிவாளர் கட்டுப்பாட்டில் உள்ள 1,945 தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்களுக்கும், செயற்பதிவாளர் கட்டுப்பாட்டில் உள்ள 3,994 தொடக்க கூட்டுறவு சங்கங்களுக்கும் இன்று தேர்தல் நடைபெறுகிறது.

இன்று காலை 8 மணிக்கு தொடங்கிய வாக்குபதிவு மாலை 4 மணி வரை நடைபெறுகிறது. இதையொட்டி, பலத்த பாதுகாபு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

வெப்துனியாவைப் படிக்கவும்