முதல்மைச்சர் கருணாநிதி 3 நாள் பயணமாக நேற்று மாலை பெங்களூரு புறப்பட்டுச் சென்றார். ஒய்வெடுப்பதற்காக அவர் பெங்களூரு சென்றிருப்பதாக தெரிவிக்கபட்டுள்ளது.
நேற்று மாலை சென்னை மறைமலை நகரில் உள்ள டாபோ நிறுவன விழாவில் முதலமைச்சர் கருணாநிதி கலந்து கொண்டார். பின்னர் அங்கிருந்து சென்னை விமான நிலையம் சென்ற அவர் பெங்களூரு புறப்பட்டுச் சென்றார்.
அவருடன் அவரது மனைவி தயாளு அம்மாள், முதலமைச்சரின் மருத்துவர், பாதுகாப்பு அதிகாரிகள், தனிச் செயலர் ஒருவரும் சென்றுள்ளனர். செவ்வாய்க் கிழமை காலை அவர் சென்னை திரும்புவார் என எதிர்பாக்கக்ப்படுகிறது.
கடந்த ஆண்டு முதலமைச்சராக பதவியேற்ற பிறகு ஓய்வெடுப்பதற்காக அவர் பெங்களூரு சென்றிருந்தார். அதன் பிறகு தற்போது மீண்டும் அவர் பெங்களூரு சென்றுள்ளார். முதலமைச்சரின் தனிப்பட்ட பயணம் என்பதால் பயண விவரம் எதுவும் தெரிவிக்கப்படவில்லை.