சிவகங்கை நகராட்சித் தலைவர் கொலை: இருவர் சரண்

Webdunia

செவ்வாய், 3 ஜூலை 2007 (20:14 IST)
சிவகங்கை நகராட்சி தலைவர் முருகன் கொலை வழக்கில் தேடப்பட்டு வந்த இரண்டு பேர் இன்று குளித்தலை நீதிமன்றத்தில் சரணடைந்தனர்.

சிவகங்கை நகராட்சி தலைவர் முருகன் கடந்த 29 ஆம் தேதி கார் குண்டு வெடிப்பில் படுகொலை செய்யப்பட்டார். சிவகங்கை நகராட்சி அலுவலகம் முன்பு நடந்த இந்த சம்பவத்தில் பலர் படுகாயம் அடைந்தனர்.

இந்த கொலை வழக்கு தொடர்பாக பொறியாளர் பாலசந்தர், திமுக கவுன்சிலர் மந்தக்காளை ஆகியோரை காவல் துறையினர் தேடிவந்தனர். இந்நிலையில், இவ்விருவரும் இன்று குளித்தலை காவல் நிலையத்தில் சரண் அடைந்தனர்.

அவர்களை ஜூலை 6 ஆம் தேதி வரை நீதிமன்ற காவல் வைக்குமாறு நீதிபதி ஆனந்தன் உத்தரவிட்டார். இதையடுத்து பாலசந்தரும், மந்தக்காளையும் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்