கோவையில் ஜூலை 5ல் உழவர் தின பேரணி!

Webdunia

செவ்வாய், 3 ஜூலை 2007 (15:00 IST)
கோவை மாவட்டத்தில் வரும் 5ஆம் தேதி உழவர் தின பேரணி நடத்தப்பட உள்ளது!

தமிழக விவசாயிகள் சங்க மாநிலத் தலைவர் டாக்டர்.சிவகாமி, திருச்சியில் அளித்த பேட்டியில், மேற்கு வங்க மாநிலத்தில் தேசிய நெடுஞ்சாலை பணிகளுக்கு கையகப்படுத்தும் நிலங்களுக்கு மிகவும் குறைவான விலை நிர்ணயம் செய்துள்ளனர். இதனால் விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதே போல் தமிழகத்திலும் திருச்சி, தஞ்சை மாவட்டங்களில் நெடுஞ்சாலை விரிவுபடுத்தும் பணி நடைபெற்று வருகிறது. மேற்கு வங்கத்தைப் போல் இங்கும் குறைவான விலையே நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதை மாற்றி தற்போதைய மார்க்கெட் விலையைத் தர வேண்டும். கோவையிலும் இதே நிலை தான்.

வருகிற 5ந் தேதி கோவையில் உழவர் தின பேரணி நடைபெறுகிறது. இந்த பேரணியில் விவசாயிகளின் தற்போதைய இந்த முக்கிய பிரச்சினையை முன்னிலைபடுத்துவோம். தேசிய நதிநீர் பிரச்சினைகளை தீர்க்க நதிகளை தேசியமயமாக்க வேண்டும் என்று டாக்டர் சிவசாமி தெரிவித்தார்.

வெப்துனியாவைப் படிக்கவும்