பொறியியல் தரவரிசை பட்டியல் இன்று மாலை வெளியீடு

Webdunia

திங்கள், 2 ஜூலை 2007 (18:28 IST)
நுழைவுத் தேர்வை ரத்து செய்த சட்ட பிரிவில் சில மாற்றங்கள் செய்யக் கோரி தனியார் சுயநிதி பொறியியல் கல்லூரிகளின் கூட்டமைப்பு சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை சென்னை உயர் நீதிமன்றம் ரத்து செய்துள்ளது.

இதையதடுத்து பொறியியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கான தரவரிசை பட்டியல் இன்று மாலை வெளியிடப்படும் என சென்னை அண்ணா பல்கலைக் கழகம் அறிவித்துள்ளது..

பொறியியல் கல்லூரிகளில் மாணவர் சேர்வதற்கான நுழைவுத் தேர்வை தமிழக அரசு ரத்து செய்து உததரவிட்டது. இதையடுத்து, + 2 தேர்வில் மாணவர்கள் பெற்ற மதிப்பெண்களின் அடிப்படையில் பொறியியல் கல்லூரிகளில் சேர்க்கப்படுவர் என்றும் அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில், துழைவுத் தேர்வு ரத்து செய்த சட்டப் பிரிவுகளில் சில மாற்றங்களை செய்யக் கோரி தனியார் சுயநிதி பொறியியல் கல்லூரிகளின் கூட்டமைப்பு சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனுவை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கியது. அதில், நுழைவுத் தேர்வு ரத்து செய்த சட்டப் பிரிவு செல்லும் என்றும், சிறுபான்மையினர் பொறியியல் கல்லூரிகளில் 50 விழுக்காடு இடங்களும், சிறுபான்மையினர் அல்லாத பொறியியல் கல்லூரிகளில் 65 விழுக்காடு இடங்களும் ஒற்றை சாளரமுறை அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடைபெறும் என்பதில் மாற்றமில்லை என்று உத்தரவிட்டது.

இதனால் பொறியியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கான தரவரிசை பட்டியல் வெளியிடுவதில் நீடித்து வந்த சிக்கல் முடிவுக்கு வந்தது. இந்நிலையில் பொறியியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கான தரவரிசை பட்டியல் இன்று மாலை வெளியிடப்படும் என சென்னை அண்ணா பல்கலைக் கழகம் அறிவித்துள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்