சிவகங்கை நகராட்சித் தலைவர் பி. முருகனும், அவருடைய காரோட்டியும் அவர்களுடைய வாகனத்தில் மறைத்து வைக்கப்பட்டிருந்த குண்டு வெடித்ததில் கொல்லப்பட்டனர்!
சிவகங்கை நகராட்சி அலுவலகத்தில் இருந்து வெளியே வந்த முருகன் அவருடைய வாகனத்தில் ஏறிய சிறிது நேரத்திலேயே குண்டு வெடித்ததாகவும், அதில் முருகனுக்கும், அவருடைய காரோட்டி பாண்டியும் அருகில் இருந்த இரண்டு பேரும் படுகாயமுற்றதாகவும், மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் முருகனும், பாண்டியும் உயிரிழந்ததாக காவல்துறை தெரிவித்துள்ளது.
இது திட்டமிட்ட படுகொலையாகவே தெரிகிறது என்று கூறிய சிவகங்கை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கண்ணன், நகராட்சித் தலைவர் வண்டியில் ஏறி சிறிது தூரம் சென்றவுடன் குண்டு வெடித்திருப்பதால், அது வெளியில் இருந்து வீசப்பட்டவில்லை என்பதும், தூரத்தில் இருந்து இயக்கி வெடிக்கப்பட்டதாக இருக்கும் சாத்தியக்கூறு இருப்பதாகவும் கூறியுள்ளார்.
காரில் இருந்த குண்டு வெடித்த போது அருகில் இருந்த பேருந்தின் முன் கண்ணாடிகள் உடைந்து சிதறியுள்ளது. பேருந்தில் இருந்த சில பயணிகளும் காயமடைந்துள்ளனர்.