மதுரை மேற்கு தொகுதிக்கு நடைபெற்ற இடைத்தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி இன்று காலை 8 மணிக்கு துவங்கி நடைபெற்று வருகிறது. இப்போதைய நிலவரப்படி காங்கிரஸ் வேட்பாளர் ராஜேந்திரன் முன்னிலையில் உள்ளார்.
9.30 மணி நிலவரப்படி காங்கிரஸ் வேட்பாளர் ராஜேந்திரன் 19,652 வாக்குகளும், அஇஅதிமுக வேட்பாளர் 12,248 வாக்குகளும் பெற்றுள்ளனர். இதன் மூலம் காங்கிரஸ் வேட்பாளர் 7,404 வாக்குகள் அதிகம் பெற்று முன்னிலையில் உள்ளார்.
மதுரை மேற்கு தொகுதிக்கு கடந்த 26 ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற்றது. மின்னணு வாக்குபதிவு இயந்திரம் மூலம் நடைபெற்ற இந்த தேர்தலில் 75 விழுக்காடு வாக்குகள் பதிவாகின.
வாக்குபதிவு இயந்திரங்களுக்கு சீல் வைக்கப்பட்டு வாக்கு எண்ணிக்கை நடைபெறும் மதுரை மருத்துவ கல்லூரியில் பத்திரமாக வைக்கப்பட்டது. இன்று காலை8 மணிக்கு வாக்குகள் எண்ணும் பணி தொடங்கியது.
மின்னணு வாக்குபதிவு இயந்திரம் மூலம் தேர்தல் வாக்குபதிவு நடைபெற்றிருப்பதால் இன்று பிற்பகல் 11 மணிக்கு முடிவு தெரிந் விடும். வாக்கு எண்ணிக்கை நடைபெறும் மதுரை மருத்துவ கல்லூரிக்கு பலத்த காவல்துறை பாதுகாப்பு செய்யப்பட்டுள்ளது.