தூத்துக்குடி, நெல்லையில் தொழிற்சாலை : முதல்வர் முன்னிலையில் ஒப்பந்தம்!

Webdunia

வியாழன், 28 ஜூன் 2007 (17:20 IST)
தமிழகத்தில் தூத்துக்குடி, திருநெல்வேலி மாவட்டங்களில் ரூ.2,500 கோடி செலவில் டைட்டானியம் டை-ஆக்சைடு தொழிற்சாலை அமைப்பதற்காஒப்பந்தம் தமிழக முதலமைச்சர் கருணாநிதி முன்னிலையில் கையெழுத்தானது!

இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டு உள்ள செய்திக்குறிப்பில், டாட்டா ஸ்டீல் நிறுவனம் தமிழ்நாட்டின் தென்பகுதியில் உள்ள பின்தங்கிய மாவட்டங் களான தூத்துக்குடி, திருநெல்வேலியிலடைட்டானியம் டை-ஆக்சைடு தொழிற்சாலையை 2,500 கோடி ரூபாய் முதலீட்டில் அமைத்திடத் திட்டமிட்டுள் ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இத்திட்டம் சுரங்கப் பணி, கனிமங்களைப் பிரித்தெடுத்தல், சின்தட்டிக் ரூஃப்டைல் தயாரித்தல், உச்ச அளவில் மதிப்புக் கூட்டப்பட்ட டைட்டானியம் டை-ஆக்ஸைடு சாயப் பொருள் தயாரித்தல் முதலியவற்றை மேற்கொள்ளும் என்றும், இத்திட்டம் ஏறத்தாழ 1,000 பேருக்கு நேரடியாகவும், 3,000 பேருக்கு மறைமுகமாகவும் வேலைவாய்ப்புகள் வழங்கும் என்றும் அந்த செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இத்திட்டம், மாநிலத்தின் பின்தங்கிய பகுதிகளில் நிறுவப்படுவதால் மக்களின் சமூக, பொருளாதார முன்னேற்றத்தை ஏற்படுத்தும். மேலும், இத்திட்டம் இப்பகுதியில் உள்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்த உதவும். தமிழக அரசு இத்திட்டத்திற்குத் தேவைப்படும் உதவிகளையும், சலுகைகளையும் அளிக்கும்.

இத்திட்டத்திற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் முதலமைச்சர் கருணாநிதி முன்னிலையில் இன்று தலைமைச் செயலகத்தில் நடைபெற்றது. இந்த ஒப்பந்தத்தில் தமிழக அரசின் தொழில்துறைச் செயலாளரசக்திகாந்தாஸ், டாடா ஸ்டீல் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் பி. முத்துராமன் ஆகியோர் கையொப்பமிட்டனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்