வங்க கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம்: தமிழகத்தில் மழை பெய்ய வாய்ப்பு

Webdunia

செவ்வாய், 26 ஜூன் 2007 (11:43 IST)
வங்க கடலில் மீண்டும் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இன்றும், நாளையும் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மண்டலம் தெரிவித்துள்ளது.

கடந்த வாரம் வங்க கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக ஆந்திரா, கர்நாடகா, கேரளா ஆகிய மாநிலங்களில் தென் மேற்கு பருவ மழை தீவிரமடைந்தது. இந்நிலையில், வங்க கடலின் வடமேற்கு பகுதியில் ஒரிசாவிற்கு அருகில் மீண்டும் குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகி உள்ளது.

இது புயல் சின்னமாக மாறும் அபாயம் ஏற்பட்டுள்ளதாகவும், இதனால் ஆந்திரா, கர்நாடகா ஆகிய மாநிலங்களில் பலத்த மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்றும் விசாகப்பட்டிணம் வானிலை ஆய்வு மண்டலம் தெரிவித்துள்ளது.

இதனால் தமிழகத்திற்கு எந்த விதபாதிப்பும் இல்லை என்றும், தமிழகம் மற்றும் புதுச்சேரியில் லேசான அல்லது இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்