அறுவை சிகிச்சை : இருவர் கைது

Webdunia

செவ்வாய், 26 ஜூன் 2007 (11:08 IST)
15 வயது சிறுவன் பிரசவ அறுவை சிகிச்சை செய்ததை தொடர்ந்து அவனது பெற்றோர்களான மருத்துவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

திருச்சி மாவட்டம் மணப்பாறையில் திண்டுக்கல் சாலையில் உள்ள மருத்துவமனையில் இளம் பெண் ஒருவர் பிரசவத்திறகாக அனுமதிக்கப்பட்டார். அவருக்கு மருத்துவமனை உரிமையாளர் மருத்துவர் முருகேசனின் மகன் திலீபன் பிரசவத்திற்கான அறுவை சிகிச்சை செய்ததாக தகவல் வெளியானது.

இதையடுத்து விசாரணை செய்து குழுவினர் அறிக்கை தாக்கல் செய்ததை அடுத்து மருத்துவமனை உரியமையாளர் முருகேசன் மற்றும் அவரது மனைவி கைது செய்யப்பட்டனர்.

அறுவை சிகிச்சை செய்த இவர்களது மகன் தலைமறைவாக உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

கைது செய்யப்பட்ட முருகேசன் மற்றும் அவரது மனைவி காந்திமதியிடம் தீவிர விசாரணை நடந்து வருகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்