கைதி தற்கொலை முயற்சி : சேலம் சிறையில் பரபரப்பு

Webdunia

சனி, 23 ஜூன் 2007 (13:17 IST)
ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த கைதி தண்டனை காலம் முடிந்தும் விடுவிக்காததால் விரக்தியடைந்து தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார். அவர் சேலம் அரசு மருத்துவமனையில் சிகிசøகு சேர்க்கப்பட்டுள்ளார்.

ஈரோடு மாவட்டம் வெள்ளகோயிலை சேர்ந்தவர் மணிகண்டன் (32). திருட்டு வழக்கில் 6 ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்ட அவர் 2003ல் சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். அவரது நன்னடத்தை, சிறை ஒழுக்கம், தேச தலைவர்கள் பிறந்தநாள் சலுகை உள்ளிட்ட காரணங்களால் அவரது தண்டனை காலத்தில் 14 மாதம் குறைந்துவிட்டதாக சிறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அதன்படி அவரது தண்டணை காலம் சென்ற ஏப்ரல் 30ல் முடிவதாகவும் அறிவிக்கப்பட்டது.

ஆனால் அவரை விடுவிக்காமல் தொடர்ந்து சிறையில் அடைத்து வைத்திருந்தனர். சிறைக்குள் அடிக்கடி வலியுறுத்தியும் அதிகாரிகள் கண்டுகொள்ளவில்லை. விரக்தியடைந்த மணிகண்டன் தற்கொலைக்கு முயன்றார். 21ம் தேதி அதிகாலை டியூப் லைட் தின்றுவிட்டார். வயிற்றுவலியால் துடித்த அவர், சேலம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இதுகுறித்து அஸ்தம்பட்டி போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்