மதுரை இடைதேர்தல் ஒத்திவைப்பா? இன்று முடிவு

Webdunia

வெள்ளி, 22 ஜூன் 2007 (11:56 IST)
மதுரை இடைத்தேர்தல் நிலவரம் குறித்து தலைமை தேர்தல் ஆணையர் கோபால்சாமியுடன், மாநில தலைமை தேர்தல் அதிகாரி நரேஷ் குப்தா இன்று டெல்லியில் ஆலோசனை நடத்திகிறார். தேர்தல் ஒத்திவைக்கப்படுமா? அல்லது திட்டமிட்ட தேதியில் நடக்குமா ? என்பது இன்று தெரியும்!

மதுரை மேற்கு தொகுதி இடைத்தேர்தல் வருகிற 26 ஆம் தேதி நடைபெறுகிறது. தேர்தலுக்கான வேட்பு மனுதாக்கல் செய்யப்பட்டு பிரச்சாரம் சூடுபிடித்துள்ளது. இந்நிலையில், அங்கு பணம் பட்டு வாடா செய்வதும், வன்முறை சம்பங்கள் நடப்பதுமாக தேர்தல் ஆணையத்திற்கு புகார் வந்தன.

இந்நிலையில், தலைமை தேர்தல் ஆணையர் கோபால்சாமி தலைமையில், தேர்தல் ஆணைய கூட்டம் டெல்லியில் நேற்று நடைபெற்றது. இக்கூட்டத்த்ல் தேர்தல் ஆணையத்திற்கு வந்த புகார்கள், ஆணையத்தின் பார்வையாளர்கள் அனுப்பிய அறிக்கைகள் குறித்து ஆயுவு செய்தனர்.

மதுரை தேர்தல் நிலவரம் குறித்து ஆலோசிக்க மாநில தலைமை தேர்தல் அதிகாரி நரேஷ் குப்தாவிற்கு தலைமை தேர்தல் ஆணையம் அழைப்பு விடுத்தது. இந்த அழைப்பை ஏற்று நரேஷ் குப்தா இன்று சென்னையில் இருந்து விமானம் மூலம் டெல்லி புறப்பட்டு சென்றார்.

அங்கு அவர் தலைமை தேர்தல் ஆணையர் கோபால்சாமியுடன், மதுரை தேர்தல் நிலவரம் குறித்து ஆலோசனை நடத்துகிறார். இதையடுத்து, தேர்தல் தள்ளிவைக்கப்படுமா? அல்லது திட்டமிட்ட தேதியில் நடைபெறுமா? என்பது இன்று தெரியவரும்.

வெப்துனியாவைப் படிக்கவும்