சுனாமியால் பாதிக்கப்பட்டோருக்கு சென்னையில் 1392 புதிய வீடுகள் கட்டப்பட்டிருப்பதாவும், இம்மாத இறுதிக்குள் வீடுகள் ஒதுக்கி தரப்பட இருப்பதாகவும் தமிழக மின் துறை அமைச்சர் ஆற்காடு வீராசாமி தெரிவித்துள்ளார்.
சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், சுனாமியால் பாதிக்கப்பட்டோருக்கு, சென்னையில் தண்டையார் பேட்டைப் பகுதியில் இந்துஸ்தான் லீவர் நிறுவன இடத்திலும், திலகர் நகரிலும், 1392 புதிய வீடுகள் கட்டப்பட்டிருப்பதாக தெரிவித்தார்.
இந்த வீடுகள் ஒதுக்குவது குறித்து அமைச்சர்களுடனும், அதிகாரிகளுடனும் விவாதிக்கப்பட்டதாக தெரிவித்த அவர், இம்மாத இறுதிக்குள் இந்த வீடுகள் உடனே ஒதுக்கி தரப்படும் என்றார்.
சுனாமியால் பாதிக்கப்பட்டோருக்கு உதவ மத்திய அரசு மேலும் ரூ 168 கோடி ஒதுக்கி உள்ளது என்றும், முதலமைச்சர் கருணாநிதி கடிதம் எழுதியதை தொடர்ந்து மத்திய அரசு இந்த நிதியை வழங்கியுள்ளது என்றும் அமைச்சர் ஆற்காடு வீராசாமி அப்போது தெரிவித்தார்.