கிருஷ்ணசாமியின் சைக்கிள் பிரசாரம்

Webdunia

செவ்வாய், 19 ஜூன் 2007 (15:03 IST)
புதிய தமிழகம் கட்சியின் நிறுவனர் டாக்டர் கே. கிருஷ்ணசாமி, திருச்சியில் செய்தியாளர்களை சந்தித்தபோது, அண்மை காலமாக தமிழக எல்லைக்கு உட்பட்ட விளை நிலங்களை பெரிய மற்றும் பன்னாட்டு நிறுவனங்கள் வாங்கி குவிக்கும் போக்கு நிலவுகிறது.

தமிழகத்தில் உள்ள விளை நிலங்கள் உற்பத்தி சாதனமாகத்தான் இருக்கின்றன. இதை முதலீட்டுக் கருவியாக மாற்றினால், பொருளாதாரத்துக்கு ஆபத்தை விளைவிக்கும்.

தமிழகத்தில் ஏற்கனவே நில உச்சவரம்பு சட்டம் உள்ளது. ஆனால் பெரிய மற்றும் பன்னாட்டு நிறுவனங்கள் மட்டும் நிலங்கள் வாங்கி குவிப்பதை தமிழக அரசு எப்படி அனுமதிக்கிறது என்று தெரியவில்லை.

இன்னும் 5 அல்லது 10 ஆண்டுகளில் தமிழகத்தை சேர்ந்த பல்லாயிரக்கணக்கான மக்கள் சொந்த மண்ணில் அனாதையாகும் சூழ்நிலை ஏற்படும். இதை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் ஓராண்டுக்கு சைக்கிளில் விழிப்புணர்வு பிரசாரம் செய்ய திட்டமிட்டுள்ளேன். இதைத் தொடங்கும் தேதியை ஜூலை மாதம் அறிவிப்பேன் என்று கிருஷ்ணசாமி கூறினார்.

வெப்துனியாவைப் படிக்கவும்