குடியரசுத் தலைவர் வேட்பாளர் தேர்வு செய்வது தொடர்பாக 3 வது அணியின் ஆலோசனைக் கூட்டம் சென்னையில் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா இல்லத்தில் நாளை நடைபெறுகிறது.
8 கட்சி தலைவர்கள் பங்கேற்ற 3 வது அணியின் முதல் ஆலோசனைக் கூட்டம் ஹைதராபாத்தில் கடந்த 6 ஆம் தேதி நடைபெற்றது. இதனைத்தொடர்ந்து, இரண்டாவது கூட்டம் சென்னையில் நாளை நடைபெறுகிறது.
முன்னாள் முதலமைச்சரும், அதிமுக பொதுச் செயலாளருமான ஜெயலலிதா இல்லத்தில் நடைபெறும் இக்கூட்டத்தில் முலாயம் சிங் யாதவ், சந்திரபாபு நாயுடு, ஓம்பிரகாஷ் சவுதாலா உள்ளிட்ட மூன்றாவது அணி கட்சித் தலைவர்கள் பலர் கலந்து கொள்கின்றனர்.
3 வது அணி சார்பில் போட்டியிடும் குடியரசுத் தலைவர் வேட்பாளர் தேர்வு செய்வது குறித்து இக்கூட்டத்தில் ஆலோசனை நடத்தப்பட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.