அதிக கட்டணம் வசூலித்தால் நடவடிக்கை: திரையரங்குகளுக்கு தமிழக அரசு எச்சரிக்கை

Webdunia

சனி, 16 ஜூன் 2007 (13:36 IST)
நிர்ணயிக்கப்பட்ட கட்டணங்களை விட அதிக கட்டணம் வசூலிக்கும் திரையரங்குகள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என திரையரங்களுக்கு தமிழக அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.

இது தொடர்பாக தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், நிர்ணயிக்கப்பட்ட கட்டணங்களை விட சில திரையரங்களில் அதிக அளவில் கட்டணம் வசூலிக்கப்படுவாத செய்தியாளர்களை நேற்று சந்தித்த முதலமைச்சரிடம் கேள்வி எழுப்பப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பான புகார் பெறப்பட்டால் சம்பந்தப்பட்ட திரையரங்குகள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என அந்த செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்