சுயமரியாதை திருமணத்திற்கு அங்கீகாரம் தேவை : கருணாநிதி!

Webdunia

செவ்வாய், 5 ஜூன் 2007 (21:00 IST)
சுயமரியாதை திருமணங்களை அங்கீகரித்து தமிழக அரசு சட்டம் இயற்றியுள்ளதைப் போல, அதற்கு மத்திய அரசும் அங்கீகாரம் அளித்து சட்டம் இயற்ற வேண்டும் என்று பிரதமருக்கும், சட்ட அமைச்சருக்கும் முதலமைச்சர் கருணாநிதி கடிதம் எழுதியுள்ளார்!

சமூக நல்லிணக்கத்தை முழுமையாக ஏற்படுத்துவதற்கு சுயமரியாதை திருமணங்களை அங்கீகரிப்பது அவசியமானதாகும் என்று அக்கடிதத்தில் கூறியுள்ள கருணாநிதி, அதற்கு முன்னுரிமை தந்து சட்டம் இயற்றிடுமாறு பிரதமரையும், சட்ட அமைச்சர் ஹன்ஸ்ராஜ் பரத்வாஜையும் கேட்டுக் கொண்டுள்ளார்.

கருணாநிதி எழுதிய கடிதத்தை மத்திய அரசின் சமூகநல அமைச்சகத்தின் பார்வைக்கு பிரதமர் அனுப்பி வைத்துள்ளார் என்று இக்கடிதம் குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்