குமரி, நாகையில் கடல் சீற்றம்! மீன்பிடிப்பும் பாதிப்பு!

கன்னியாகுமரி, ராமநாதபுரம், நாகை மாவட்ட கடலோர பகுதிகளில் கடல் சீற்றம் அதிகரித்துள்ளது. குடியிருப்புப் பகுதிகளிலும் கடல் நீர் புகுந்துள்ளது!

கோடை காலத்தில் பொதுவாக கடல் காற்றின் வேகம் அதிகரிப்பதால், அலைகளின் சீற்றமும் அதிகமாகவே காணப்படும். இதனால் மீன்பிடிப்புப் பணிகளும் பாதிக்கப்படுவது வழக்கமே.

எனினும், இந்த ஆண்டு கடலின் சீற்றம் அதிகமாகக் காணப்படுகிறது. கன்னியாகுமரி, நாகை, ராமநாதபுரம் கடற்கரையை ஒட்டிய குடியிருப்புப் பகுதிகளுக்குள்ளும் கடல் நீர் புகுந்துள்ளது. இதனால் அங்கு வாழும் பொதுமக்கள் பெரும் அச்சத்தில் உள்ளனர்.

கடலின் சீற்றம் நாளுக்கு நாள் அதிகரிப்பதால் பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

ராஜ்க்காமங்கலம் துறை, மேலமணக்குடி, கீழமணக்குடி பகுதிகளில் கடல் சீற்றம் அதிகமாக உள்ளது. ராமநாதபுரம் மாவட்டம் தனுஷ்கோடி, கீழக்கரை அருகே உள்ள வேலாயுதபுரம், தோப்புவலசை, ஆஞ்சநேயபுரம், பெரியபட்டணம் உள்ளிட்ட இடங்களிலும் கடல் நீர் புகுந்துள்ளது.

கடல் சீற்றம் காரணமாக இப்பகுதியில் வாழும் மீனவர்கள் மீன் பிடிக்கப் போகாமல் உள்ளனர். கன்னியாகுமரி கடற்கரைப் பகுதியில் இருந்து திருவள்ளுவர் சிலைக்குச் சென்று வரும் படகு போக்குவரத்தும் நிறுத்தப்பட்டுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்