தமிழகம் முழுவதும் பொறியியல் கல்லூரிகளில் சேருவதற்கான விண்ணப்பம் விநியோகம் இன்று தொடங்கியது. ஜூன் 5 ந் தேதி வரை விண்ணப்பம் விநியோகிப்படும்.
பொறியியல் கல்லூரிகளில் சேர்வதற்கு நுழைவுத் தேர்வு ரத்து செய்யப்பட்டதை தொடர்ந்து பிளஸ் 2 தேர்வு முடிவு முன்கூட்டியே வெளியிடப்பட்டது. மாணவர்கள் பெற்ற மதிபெண்கள் அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடத்தப்படுகிறது.
இந்நிலையில், தமிழகம் முழுவதும் மாணவர்கள் பொறியியல் கல்லூரிகளில் சேர்வதற்கான விண்ணப்பம் விநியோகம் இன்று தொடங்கியது. தொடர்ந்து ஜூன் 5 ந் தேதி வரை விண்ணப்பம் விநியோகிப்படுகிறது.
ஜூன் 25 ந் தேதி தரப்பட்டியல் வெளியிடப்படுகிறது. ஜூலை 9 ந் தேதி முதல் ஆகஸ்ட் 15 ந் தேதி கலந்தாய்வு கூட்டம் நடைபெறுகிறது. ஆகஸ்ட் 20 ந் தேதி முதல் வகுப்புகள் ஆரம்பமாகின்றன.