ஒலிம்பிக் ஜோதியை ஏந்தி செல்லும் வாய்ப்பு அயல் நாடு வாழ் இந்திய பெண்ணுக்கு கிடைத்துள்ளது.
சீனாவின் பீஜிங் நகரில் இந்தாண்டு ஆகஸ்ட் மாதம் ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற உள்ளன. இதற்கான ஒலிம்பிக் ஜோதியை ஏந்தி செல்லும் எட்டு பேரில், சீனாவில் வாழும் அயல் நாடு வாழ் இந்தியரான மீனா பரோட்டும் ஒருவர். சாலினி லேபராட்டரிஸ் என்ற மருத்துவ நிறுவனத்தின் மேலாளராக பணிபுரிகிறார். சீனாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் மன்மோகன் சிங் பரோட்டை சந்தித்து வாழ்த்து கூறினார்.
இதுகுறித்து 36 வயதான பரோட் கூறுகையில், "நாளிதழ் ஒன்றில் வெளியான விளம்பரத்தை பார்த்து ஒலிம்பிக் ஜோதியை ஏந்தி செல்லும் ஆசை வந்தது. விண்ணப்பித்ததில் 200க்கும் மேற்பட்ட போட்டியாளர்களை கடந்து நான் தேர்வாகியிள்ளேன். இதற்காக பிரதமரை சந்தித்தபோது, ஒரு இந்தியர் இந்த சவாலை ஏற்றதற்காக மிகவும் மகிழ்ச்சியும், பெருமையும் அடைவதாக கூறினார்.
இந்திய மக்களின் சார்பாக நான் இங்கு இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. பிரதமரை சந்தித்த இந்நாளை எனது வாழ்நாளில் மறக்க முடியாது," என்றார்.