3வது டெ‌‌ஸ்‌ட்: நடுவர் பக்னர் நீக்கம்!

திங்கள், 7 ஜனவரி 2008 (11:37 IST)
சி‌ட்‌னி டெ‌‌ஸ்‌ட்டி‌‌‌ல் தவறான ‌‌தீ‌ர்‌ப்பு கொ‌டு‌த்த நடுவ‌ர் ப‌க்ன‌ர், 3வது டெ‌ஸ்‌ட் போ‌ட்டி‌யி‌ல் இரு‌ந்து அ‌திரடியாக ‌நீ‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளா‌ர்.

இந்திய அணி `டிரா' செய்ய வேண்டிய சிட்னி டெஸ்டில் நடுவர்கள் பக்னர், பென்சன் ஆகியோ‌ரி‌ன் தவறான ‌தீ‌ர்‌ப்புகளா‌ல் ஆஸ்‌ட்ரேலியா வெற்றி பெற்றது. தவறான தீர்ப்புகளை தயக்கமின்றி வழங்கிய இவர்களுக்கு பலரும் கண்டனம் தெரிவித்து வருகிறார்கள்.

இந்திய கிரிக்கெட் அணியின் மானேஜர் சேட்டன் சவுகான் கூறுகையில், இந்த டெஸ்டில் நிறைய முடிவுகள் எங்களுக்கு எதிராக அமைந்தது. ஒரு சில மட்டுமே ஆஸ்‌ட்ரேலியாவுக்கு எதிராக இருந்தது. உண்மையிலேயே பாதிக்கப்பட்டது நாங்கள் தான். நடுவர்களின் முடிவுகளில் 50 ‌விழு‌க்காடு எங்களுக்கு சாதகமாக இருந்திருந்தாலும், ஆட்டத்தின் முடிவு வேறு மாதிரி இருந்திருக்கும்.

ச‌ர்வதேச ‌கி‌ரி‌க்கெ‌ட் பேரவை‌க்கு (ஐ.சி.சி.) நானு‌ம் வேண்டிக்கொள்வது என்னவென்றால், தயவு செய்து இந்த இரண்டு நடுவர்களையும் குறிப்பாக பக்னரை எதிர்காலத்தில் எங்களது போட்டிகளுக்கு நடுவராக நியமிக்காதீர்கள் எ‌ன்று தெ‌‌ரி‌வி‌த்தா‌ர்.

இநதநிலையில், எதிர்ப்புகள் வலுத்ததால் பெர்த்தில் 16ஆ‌ம் தேதி துவங்கும் 3-வது டெஸ்டில் நடுவர் பக்னர் அதிரடியாக நீக்கப்பட்டு உள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்