இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளராக நியமிக்கப்பட உள்ள கேரி கர்ஸ்டன் குறித்து இந்திய டெஸ்ட் அணித் தலைவர் அனில் கும்ளே கூறுகையில், என்ன நடக்கும் என்று காத்து இருந்து பார்க்க விரும்புகிறோம். இந்த நேரத்தில் சொல்வது என்றால் கேரி கர்ஸ்டன் கடினமான போட்டியாளர்.
1990-ல் உலகின் முன்னணி அணிகளில் ஒன்றாக விளங்கிய தென் ஆப்பிரிக்கா அணியில் இடம் பெற்று இருந்தார். அதனால் அவரது சிறந்த திறன் நமது அணிக்கு உதவும் என்று நம்புகிறேன் என்று கும்ளே கூறினார்.
கொல்கத்தாவில் நாளை இந்திய கிரிக்கெட் பேரவைத் தலைவர் சரத்பவார் தலைமையில் நடக்க உள்ள உயர்மட்ட கூட்டத்தில் கேரி கர்ஸ்டனை பயிற்சியாளராக நியமனம் செய்வது குறித்து இறுதி முடிவு எடுக்கப்படுகிறது. இந்த கூட்டத்துக்கு பின்னரே முறையான அறிவிப்பு வெளியாகும் என்று தெரிகிறது.