மருத்துவமனையிலிருந்து ‌திரு‌ம்‌பினா‌ர் அக்தர்!

Webdunia

வியாழன், 29 நவம்பர் 2007 (10:14 IST)
மார்பு நோய்க்கிருமி தாக்குதல் காரணமாக கொல்கத்தா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர் ஷோயப் அக்தர் புதன் மாலை ‌திரு‌ம்‌பினா‌ர்.

அவருக்கு சிகிச்சை அளித்த அப்பல்லோ க்ளெனீகிள்ஸ் மருத்துவ இயக்குனர் மரு‌த்துவ‌ர் வி.ஆர். ராமண்ணன் அக்தரின் உடல் நிலை தற்போது கட்டுப்பாட்டில் உள்ளது என்றார்.

அவரது உடலில் நீர்ச்சத்து வற்றிவிட்டதால் நிறைய தண்ணீர் குடிக்கவேண்டும் என்று மருத்துவர்கள் அக்தருக்கு ஆலோசனை வழங்கியுள்ளனர்.

நாளை துவங்கும் 2வது டெஸ்டில் அவர் விளையாட முடியுமா என்று ராமண்ணனிடம் செய்தியாளர்கள் கேட்டபோது, "அக்தர் உடல் அளவில் பலமிக்கவர், ஆனால் அவர் விளையாடும் முடிவு அணி நிர்வாகத்திடமும், அந்த அணியின் உடற்கோப்பு நிபுணரிடமும்தான் உள்ளது என்றார்.

வெப்துனியாவைப் படிக்கவும்