வங்கதேச கிரிக்கெட் அணியின் புதிய பயிற்சியாளராக ஆஸ்ட்ரேலியாவைச் சேர்ந்த ஜேமி சிட்டன்ஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.
தற்போது ஆஸ்ட்ரேலிய அணியின் உதவிப் பயிற்சியாளர் பொறுப்பில் இருக்கும் இவர் டெஸ்ட் போட்டிகள் எதையும் விளையாடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 1988ம் ஆண்டு லாகூரில் ஒரு நாள் சர்வதேச போட்டி ஒன்றில் மட்டுமே இவர் விளையாடியுள்ளார்.
கடந்த மே மாதம் வங்கதேச பயிற்சியாளர் பொறுப்பிலிருந்து டேவ் வாட்மோர் விடைபெற்றார். அதன் பிறகு உதவி பயிற்சியாளர் ஷான் வில்லியம்ஸ் வங்கதேச பயிற்சியாளர் பொறுப்பில் இருந்து வந்தார்.
ஆஸ்ட்ரேலிய கிரிக்கெட் பயிற்சிப் பொறுப்பில் சிட்டன்ஸ் தொடர்ந்து இருந்து வந்தார். 2005 ஆஷஸ் தொடருக்கு முன்பு வரை அவர் ஆஸ்ட்ரேலிய கிரிக்கெட் பயிற்சி மையத்தில் மூத்த பயிற்சியாளராக இருந்தார். அதன் பிறகு ஆஸ்ட்ரேலிய அணியின் உதவிப் பயிற்சியாளராக பணியாற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது.