இங்கிலாந்தின் ஒரு நாள் அணியின் தலைமைப் பொறுப்பில் இருந்து விலகிக் கொள்வதாக மைக்கேல் வான் அறிவித்துள்ளார்!
லண்டனில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய மைக்கேல் வான் உலகக் கோப்பை போட்டிகளில் இங்கிலாந்து அணி தோற்றதற்குப் பிறகு தான் அது குறித்து நன்கு பரிசீலனை செய்ததாகவும், இங்கிலாந்து அணியை மேம்படுத்த தனது இம்முடிவு அவசியமானது என்று கூறினார்.
ஆயினும், ஒரு நாள் அணியில் ஒரு வீரராக தான் தொடர்ந்து விளையாடத் தயார் என்று வான் கூறியுள்ளார். (யு.என்.ஐ.)