கடந்த 10 ஆண்டுகளாக ரயில் கட்டணம் உயர்த்தப்படவில்லை. இப்படிப்பட்ட நிலையில், தற்போது கட்டணம் உயர்த்தப்பட்டது சரியான நடவடிக்கை தான் என்று மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.
மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் டெல்லியில் நேற்று பேட்டியளித்த போது கூறுகையில், கடந்த 10 ஆண்டுகளாக ரயில் கட்டணம் உயர்த்தப்படவில்லை. இப்படிப்பட்ட நிலையில், கட்டண உயர்வு சரியான நடவடிக்கைதான். எதிர்க்கட்சிகளாக இருப்பதால் இதை எதிர்க்க வேண்டிய நிலையில் எதிர்க்கட்சிகள் உள்ளன.
தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சியில் இருந்தபோது, ரயில்வே அமைச்சராக இருந்த நிதிஷ்குமார் ரயில் கட்டணத்தை உயர்த்தினார் என்பதை மறந்து விடக்கூடாது. இது ஒரு திடமான பொருளாதார முடிவாகும்.
இதன் மூலம் பொருளாதார ரீதியில் ரயில்வேக்கு பலம் சேரும். இதுபோன்ற நடவடிக்கைகளை அரசியலாக்கக் கூடாது. டீசல் விலையை உயர்த்தும் திட்டம் எதுவும் அமைச்சரவையில் விவாதிக்கப்படவில்லை என்று ப.சிதம்பரம் கூறினார்.