பேஸ்புக் கைது குறித்து மகாராஷ்டிரா விளக்கம் தர உச்ச நீதிமன்றம் உத்தரவு
வெள்ளி, 30 நவம்பர் 2012 (16:28 IST)
FILE
பேஸ்புக்கில் கருத்து தெரிவித்த ஷாஹீன் தாதா மற்றும் ரினு ஸ்ரீனிவாசன் ஆகியோரை கைது செய்தது குறித்து மகாராஷ்டிரா மாநில அரசு அடுத்த நான்கு வாரங்களில் விளக்கம் அளிக்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பால் தாக்கரே மறைவையடுத்து மும்பையில் முழு அதைப்பு நடத்தப்பட்டது. இது குறித்து ஷாகீன் என்ற கல்லூரி மாணவி பேஸ்புக்கில் விமர்சனம் செய்தார். இதை அவரது தோழி வரவேற்றிருந்தார். இதனை அடுத்து மகாராஷ்ட்ரா காவல்துறை இரு இளம் பெண்களையும் கைது செய்தது.
இதனால் நாடு முழுவது கருத்து சுதந்திரத்து எதிரான கைது என மகாராஷ்டிரா காவல் துறைக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டது. இதனை அடுத்து நீதிமன்ற உத்தரவின்படி இரண்டு பெண்களும் விடுவிக்கப்பட்டனர்.
இதற்கிடையில் இந்த சம்பவம் தொடர்பாக போலீஸ் உயர் அதிகாரிகள் 2 பேரை மகாராஷ்டிர அரசு சஸ்பெண்ட் செய்தது.. மாணவிகள் வழக்கை விசாரித்த மாஜிஸ்திரேட் இடமாற்றம் செய்யப்பட்டார்.
இது தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் பொது நல வழக்கு ஒன்றை டெல்லி மாணவி ஒருவர் தொடுத்தார். இதனை விசாரித்த உச்ச நீதிமன்ற அமர்வு, மகாராஷ்டிரா அரசு இரண்டு பெண்களை கைது செய்தது தொடர்பாக நான்கு வாரங்களுக்குள் விளக்கமளிக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.