சொந்த பங்களாவை புதுப்பிக்க ரூ 86 கோடி மக்கள் பணத்தை செலவிட்டுள்ளார் உத்திரப் பிரதேசத்தின் முன்னாள் முதவரும், பகுஜன் சமாஜ் கட்சித் தலைவருமான மாயாவதி.
கடந்த 2007-ல் மாயாவதி உத்திரப் பிரதேசத்தின் முதல்வராக பதவியேற்றதும் அவரின் சொந்த பங்களாவை புதுப்பிக்கும் பணியை ஆரம்பித்தார். தனது பதவிக்காலம் முடியும் தருவாயில் பங்களாவை புதுப்பிக்கும் பணியும் முடிந்துள்ளது.
இது பற்றி தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலம் இந்தத் தகவலை பெற்றுள்ளார் சமாஜ்வாதி கட்சியை சேர்ந்த சிவபால் யாதவ்.
இது தொடர்பான கேள்வியை அவர் ஒரு வருடத்துக்கு முன்பே விண்ணப்பித்துள்ளார். ஆனால் அதற்கான தகவல் தற்போது தான் அரசிடமிருந்து அவருக்கு பதில் கிடைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.