உ.பி.தேர்தல்: வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லாத கெஜ்ரிவால்

செவ்வாய், 28 பிப்ரவரி 2012 (13:42 IST)
உத்தரபிரதேசத்தில் இன்று நடைபெற்று வரும் 6ஆவது கட்ட தேர்தலில்,ஓட்டளிக்க முடியாமல் கெஜ்ரிவால் ஏமாற்றத்துடன் திரும்பினார்.

உத்தரபிரதேசத்தில் இன்று 6 ஆவது கட்ட தேர்தல் நடைபெற்றது. இதில் ஓட்டு பதிவு செய்வதற்காக அன்னா ஹசாரே ஆதரவாளரான கெஜ்ரிவால் தனது தொகுதிக்கு சென்றார்.

ஆனால் அங்கு வாக்காளர் பட்டியலில் அவரது பெயர் இல்லை என்பதால் ஓட்டு போட அனுமதி மறுக்கப்பட்டது.இதனால் அவர் ஏமாற்றமடைந்தார்.

அங்குள்ள அதிகாரிகளிடம் அவர் பேசி பார்த்தும் பலனில்லாததால் ஓட்டு போடாமல் திரும்பினார்.

வெப்துனியாவைப் படிக்கவும்