அரசியல் குழப்பம்: மாலத்தீவிற்கு இந்திய அதிகாரி பயணம்

புதன், 15 பிப்ரவரி 2012 (18:20 IST)
மாலத்தீவில் ஏற்பட்டுள்ள அரசியல் குழப்பங்களை முடிவுக்கு கொண்டு வருவதற்கான முயற்சியாக இந்திய அயலுறவுத் துறை அமைச்சக அதிகாரி ஒருவர் அங்கு அவசர பயணம் மேற்கொண்டுள்ளார்.

மாலத்தீவு அதிபராக இருந்த நஷீத் பதவி விலகியதைத் தொடர்ந்து நாட்டின் புதிய அதிபராக துணை அதிபராக இருந்த ஹசன் வகீத் பொறுப்பேற்றார்.

ஆனால் முன்னாள் அதிபர் நஷீத்தின் ஆதரவாளர்கள் தொடர்ந்து புதிய அரசுக்கு எதிராக போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.இது வன்முறையாக வெடிக்கக் கூடிய நிலைமை உருவாகி வருகிறது.

இந்நிலையில் இந்தியப் பெருங்கடலில் முக்கியத்துவம் வாய்ந்த தீவு மாலத்தீவு என்பதால்,இந்தியா அங்கு அமைதியை ஏற்படுத்த முயற்சித்து வருகின்றது.

இந்த நடவடிக்கைகளில் ஒரு பகுதியாக இந்தியாவின் அயலுறவுத்துறை செயலர் ரஞ்சன் மத்தாய் மாலத்தீவுக்கு புறப்பட்டு சென்றுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்