டெல்லி குண்டுவெடிப்பு: தேசிய புலனாய்வு குழு விசாரணை

புதன், 7 செப்டம்பர் 2011 (16:45 IST)
டெல்லி உயர் நீதிமன்றம் அருகே இன்று நிகழ்ந்த குண்டுவெடிப்புய் தொடர்பாக விசாரணை நடத்துவதற்காக தேசிய புலனாய்வுக் குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய தேசிய புலனாய்வு அமைப்பின் (என்ஐஏ) தலைவர் எஸ்.ஜி.சின்ஹா, இன்று நிகழ்ந்த டெல்லி குண்டுவெடிப்பு தொடர்பாக விசாரணை நடத்த 20 அதிகாரிகள் கொண்ட குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

குண்டுவெடித்த இடங்களில் இருந்து புலனாய்வு அமைப்பு ஆதாரங்களை சேகரித்துள்ளது. இந்த குண்டுவெடிப்பில் பயன்படுத்தப்பட்டுள்ள வெடிபொருள் எந்த வகையைச் சேர்ந்தது என்பது குறித்து பரிசோதனை நடத்தப்பட்டு வருகிறது என்று அவர் மேலும் கூறினார்.

வெப்துனியாவைப் படிக்கவும்