விலைவாசி பிரச்சனை - நாடாளும‌ன்ற‌த்த‌ி‌ல் இ‌ன்று வா‌க்கெடு‌ப்பு

புதன், 3 ஆகஸ்ட் 2011 (08:58 IST)
விலைவா‌சி உய‌ர்வு ப‌ற்‌றி நாடாளும‌ன்ற‌த்‌தி‌ல் இ‌ன்று வா‌க்கெடு‌ப்புட‌ன் ‌விவாத‌ம் நடைபெ‌று‌கிறது.

நாடாளுமன்ற அலுவல் ஆலோசனைக் கூட்டத்தில், வா‌க்கெடுப்புடன் கூடிய விவாதம் நடத்துவதற்கு மத்திய அரசு நே‌ற்று சம்மதம் தெரிவி‌த்தது.

அதேபோல், விலைவாசி உயர்வு பற்றிய தீர்மான வாசகங்கள் இரு தரப்பினராலும் ஏற்றுக் கொள்ளும் வகையில் மாற்றி அமைக்கப்பட்டது.

பா.ஜனதா முதலில் கொண்டு வர உத்தேசித்து இருந்த தீர்மானத்தில், 'விலைவாசி உயர்வு பிரச்சனையில் மத்திய அரசுக்கு கண்டனம்' தெரிவிக்கப்பட்டு இருந்தது.

திருத்தப்பட்ட தீர்மானத்தில், `விலைவாசி உயர்வுக்கு ஆழ்ந்த கவலை தெரிவித்துக்கொள்வதுடன், பணவீக்கத்தை கட்டுப்படுத்த உடனடியாக வெளிப்படையான நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்று பா.ஜ.க கூ‌றியு‌ள்ளது.

மக்களவையில் இ‌ன்று கேள்வி நேரம் முடிவடைந்தவுடன் பா.ஜ.க மூத்த தலைவரும், முன்னாள் மத்திய அமை‌ச்சருமான யஷ்வந்த் சின்கா, ஐக்கிய ஜனதா தள தலைவர் சரத் யாதவ் இருவரும் வா‌க்குகெடுப்புடன் கூடிய இந்த தீர்மானத்தை தாக்கல் செய்கிறார்கள்.

வெப்துனியாவைப் படிக்கவும்