லோக்பால் மசோதா வரைவு தொடர்பாக வருகிற ஜூலை மாதம் 3 ஆம் தேதியன்று அனைத்துக்கட்சி கூட்டத்தை கூட்ட மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
லோக்பால் மசோதா வரைவு ஆலோசனைக் குழு கூட்டத்தில் லோக்பால் விசாரணை வரம்புக்குள் பிரதமரையும் சேர்க்க வேண்டும் என்ற குடிமக்கள் பிரதிநித்கள் குழு விடுத்த கோரிக்கையை, அரசு தரப்பு பிரதிநிதிகள் குழு ஏற்க மறுத்துவிட்டது.
இது தவிர மேலும் சில அம்சங்களில் ஏற்பட்ட கருத்துவேறுபாடு காரணமாக லோக்பால் மசோதா முழு வடிவம் பெறாமலேயே உள்ளது.
இந்நிலையில் இது குறித்து விவாதிப்பதற்காக, வருகிற ஜூலை மாதம் 3 ஆம் தேதியன்று அனைத்துக்கட்சி கூட்டத்தை மத்திய அரசு கூட்டியுள்ளது.
இக்கூட்டத்தில் லோக்பால் மசோதா தொடர்பாக எழுந்துள்ள கருத்துவேறுபாடுகளை முன்வைக்கும் என்று தெரிகிறது.