மகளிர் இட ஒதுக்கீடு மசோதா தொடர்பாக விவாதிப்பதற்காக சபாநாயகர் மீராகுமார் நாளை அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்டியுள்ளார்.
நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் வருகிற அக்டோபர் மாதம் 1 ஆம் தேதியன்று தொடங்குகிறது.
இந்நிலையில்,இந்த கூட்டத்தொடரிலாவது நாடாளுமன்றம் மற்றும் மாநில சட்டசபைகளில் மகளிருக்கு 33 விழுக்காடு இட ஒதுக்கீடு அளிக்க வகை செய்யும் மசோதாவை நிறைவேற்ற வேண்டும் என்று மீராகுமார் விரும்புகிறார்.
இதனையடுத்து இது குறித்து விவாதிப்பதற்காக மீரா குமார் நாளை அனைத்துக்கட்சி கூட்டத்தை கூட்டி உள்ளார்.