பெட்ரோல் விலை உயர்வை திரும்பப் பெற முடியாது - பிரணாப்

ஞாயிறு, 22 மே 2011 (11:45 IST)
சர்வதேச சந்தையில் நிச்சயமற்ற தன்மை நிலவுகிறது என்று கூறியுள்ள நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி, தற்போதுள்ள நிலையில் பெட்ரோல் விலை உயர்வை திரும்பப் பெற முடியாது என்று கூறியுள்ளார்.

டெல்லியல் இந்திய வங்கிகள் சங்கத்தின் 63வது ஆண்டுக் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய பிரணாப் முகர்ஜி, குறிப்பிட்ட சில உணவுப் பொருட்களின் உற்பத்தி குறைய வாய்ப்புள்ளதால், சில அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர வாய்ப்புள்ளதாகவும், சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை நிச்சயமற்ற நிலையில் இருக்கிறது என்றும் கூறியுள்ளார்.

பெட்ரோலியப் பொருட்களுக்கு கடந்த ஆண்டு ரூ.1 லட்சம் கோடி வரை மானியம் அளிக்கப்பட்டுள்ளதாகக் கூறியுள்ள பிரணாப் முகர்ஜி, பெட்ரோல் விலை உயர்வு தற்போதைய நிலையில் திரும்பப் பெற முடியாது என்றும் கூறியுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்