தீவிரவாத அச்சுறுத்தல்: தென்னிந்தியாவில் போர் விமானங்களை நிறுத்த திட்டம்

செவ்வாய், 28 டிசம்பர் 2010 (18:42 IST)
லஷ்கர் இ தொய்பா தீவிரவாதிகள் மற்றும் கடல்கொள்ளையர்களின் அச்சுறுத்தலை சமாளிக்கும்விதமாக தென்னிந்தியப் பகுதிகளில் போர் விமானங்களை நிறுத்த இந்திய விமானப்படை திட்டமிட்டுள்ளது.

டெல்லியில் இன்று செய்தியாளர்களிடம் இதனை தெரிவித்த இந்திய விமானப்படையின் துணைத் தலைவர் ஏர் மார்ஷல் பி.கே.பர்போரா, மேலும் கூறியதாவது:

எல்சிஏ போர் விமானங்களின் 2 பிரிவுகள் தென்னிந்தியாவை அடிப்படையாகக் கொண்டிருக்கும். எம்-எம்ஆர்சிஏ ரக போர் விமானங்கள் அல்லது சு -30 எம்கேஐ ரக போர் விமானங்கள் ஆகியவற்றில் ஏதாவது ஒரு பிரிவும் அங்கு நிறுத்தப்படும்.

தென்னிந்தியாவிலும், அந்தமான் நிகோபர் தீவுகளிலும் விமானப்படையின் பங்கை அதிகரிப்பது குறித்து தீவிரமாக சிந்தித்து வருகிறோம்.

தமிழகத்தின் கோவை மாவட்டத்தில் சூளூரில் எல்சிஏ போர் விமானங்களில் 2 பிரிவுகளை நிறுத்த விமானப்படை திட்டமிட்டுள்ளதாக பாதுகாப்புத் துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

வெப்துனியாவைப் படிக்கவும்