நக்சலிசம் நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக உள்ளது: பிரணாப்

செவ்வாய், 28 டிசம்பர் 2010 (18:31 IST)
நக்சலிசம் இந்தியாவின் அமைதி மற்றும் பாதுகாப்புக்கு மிகப்பெரிய அச்சுறுத்தலாக உள்ளது என்று மத்திய நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி கூறியுள்ளார்.

மத்திய ரிசர்வ் காவல் படையான சிஆர்பிஎப் உதயமான 71 ஆவது ஆண்டு தினத்தையொட்டி டெல்லியில் இன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்று பேசுகையில் இதனைக் கூறிய அவர், பொருளாதார ரீதியாக பின் தங்கிய பகுதிகளில் நக்சலிசம் பரவியிருப்பது கவலையளிப்பதாக உள்ளது என்றார்.

பொருளாதார ரீதியாக மிகவும் பின்தங்கிய பகுதிகளில் நக்சலிசம் பரவியிருப்பது, உள்ளூர் மக்களின் எதிர்பார்ப்புகளை நாம் நிறைவேற்ற தவறியதை பிரதிபலிப்பதாக உள்ளது என்று அவர் மேலும் கூறினார்.

வெப்துனியாவைப் படிக்கவும்