3வது முறையாக மூவர் குழு காஷ்மீர் பயணம்
ஞாயிறு, 19 டிசம்பர் 2010 (11:59 IST)
பிரிவினைவாதிகளின் போராட்டத்தால் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில் மூவர் குழுவினர் ஜம்மு காஷ்மீரில் மேற்கொண்டு வருகின்றனர்.
ரஜோரி, பைசாபாத் உள்ளிட்ட பகுதிகளில் கருத்து கேட்டறிந்த அவர்கள், ஸ்ரீநகரில் செய்தியாளர்களை சந்தித்தனர்.
அப்போது பேசிய மூவர் குழு உறுப்பினரான அன்சாரி, காஷ்மீர் வாசிகள் இந்தியாவில் இருந்து பிரிய விரும்பவில்லை என்றும் இந்தியாவுடன் இருக்கவே விரும்புவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்தியாவும், பாகிஸ்தானும் இணைந்து காஷ்மீர் பிரச்சனைக்கு தீர்வு காண வேண்டும் என்று பெரும்பாலானோர் விருப்பம் தெரிவித்துள்ளதாகவும் அன்சாரி கூறியுள்ளார்.
காஷ்மீர் நிலவரம் குறித்து கண்டறிய மத்திய அரசால் அமைக்கப்பட்ட மூவர் குழுவினர் ஜம்மு காஷ்மீருக்கு 3வது முறையாக பயணம் மேற்கொண்டுள்ளனர்.
அரசியல் தலைவர்கள், பிரிவினைவாதிகள், அரசு சாரா அமைப்பினர், பழங்குடியினரான குஜார்கள் உள்ளிட்டோரையும் முதல் கட்டமாக அவர்கள் சந்தித்து கருத்துகள் கேட்டறிந்தனர்.
காஷ்மீர் பள்ளத்தாக்கில் பெரும்பாலான இடங்களில் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில் மூவர் குழுவினர் கருத்து கேட்டறிந்து வருவது குறிப்பிடத்தக்கது.