'அயோத்தி தீர்ப்பை 3 மாதங்களுக்கு ஒத்திவைக்க மனு தாக்கல்'
திங்கள், 27 செப்டம்பர் 2010 (18:38 IST)
அயோத்தி வழக்கின் தீர்ப்பை 3 மாதங்களுக்கு ஒத்திவைக்கக் கோரி உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்வதென்று இவ்வழக்கின் முக்கிய பிரதிவாதிகளில் ஒருவரான நிமோஹி அகரா தீர்மானித்துள்ளார்.
அயோத்தி தீர்ப்பை வழங்கு வழங்குவதற்கு உச்ச நீதிமன்றம் விதித்திருந்த கெடு நாளையுடன் முடிவடைய உள்ள நிலையில், இம்மனு தாக்கல் செய்யப்பட உள்ளது.
இத்தகவலை அவரது வழக்கறிஞர் ரஞ்சித் லால் வர்மா இன்று லக்னோவில் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
நிமோஹி அகரா சார்பில் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்வதற்காக இன்று டெல்லி புறப்பட்டுச் செல்லும் முன் அவர் இதனை தெரிவித்தார்.
மேலும், அலகாபாத் உயர்நீதிமன்றத்தில் அயோத்தி நிலம் தொடர்பான வழக்கை விசாரிக்கும் 3 நீதிபதிகளில் ஒருவரான தரம் வீர் சர்மா இந்த மாத இறுதியில் ஓய்வுபெற உள்ள நிலையில், அவரது பதவிக்காலம் நீட்டிக்கப்பட்ட விவகாரத்தில் உச்சநீதிமன்றம் தலையிட வேண்டும் என்றும் தனது மனுவில் கோரவுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.