நக்சலைட்கள் கோழைகள், ராணுவ நடவடிக்கை இல்லை- ப.சிதம்பரம்

ஞாயிறு, 4 ஏப்ரல் 2010 (16:26 IST)
லால்கார் பகுதியில் இன்று ஆய்வு மேற்கொண்ட மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் மாவோயிஸ்ட்களுடன் பேச்சு வார்த்தை நடத்த இன்னொரு வாய்ப்பு வழங்கப்படுவதாகத் தெரிவித்தார். மேலும் ராணுவ நடவடிக்கை எடுக்கப்படமாட்டாது என்றும் அவர் தெரிவித்தார்.

காடுகளில் ஒளிந்து கொண்டு போலீஸ் அரஜாகங்களு எதிரான மக்கள் இயக்கத்தை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தி வரும் மாவோயிஸ்ட்கள் ஒரு கோழை என்று கூறினார் சிதம்பரம்.

"நக்சலைட்டுகளுக்கு எதிராக ராணுவ நடவடிக்கை இல்லை, ஆனால் மாநில காவல்துறை, துணை ராணுவப்படையினர் மட்டுமே தொடர்ந்து ஈடுபடுத்தப்படுவார்கள். நக்சல்கள் கோழைகள், அவர்கள் ஏன் காடுகளில் ஒளிந்து கொள்ளவேண்டும். அவர்கள் உண்மையில் மக்கள் நலனிலும் வளர்ச்சியிலும் நம்பிக்கை வைத்திருந்தால் பேச்சு வார்த்தைகளுக்கு சம்மதிக்கவேண்டும்.

உலகில் எதை வேண்டுமானாலும் பேசலாம் வாருங்கள் ஆனால் வன்முறையைக் கைவிட்டு விடுங்கள். என்று அழைப்பு விடுத்துள்ளார் ப.சிதம்பரம்.

மேலும் கிராம மக்கள் மாவோயிஸ்ட்களுக்கு எந்த உதவியும் செய்யக்கூடாது என்று கேட்டுக் கொண்டதக அவர் தெரிவித்துள்ளார்.

தான் நேரடியாக மக்களிடம் பேசிய போது அடிப்படை வசதிகள் இல்லை என்று கூறினர் என்றும் ஆனால் இதற்கு மாவோயிஸ்ட்களை நம்பப் போகிறீர்களா என்று தான் கேட்டதற்கு அவர்கள் ஒரு போதும் இல்லை என்றுதன் பதில் கூறியதாகத் தெரிவித்தார் அவர்.

அதே போல் இணைந்த பாதுகாப்புப் படையினரை நக்சல் பகுதிகளிலிருந்து விலக்கிக் கொள்ளும் பேச்சுக்கே இடமில்லை, இது நீண்ட நாட்களாக தீட்டப்பட்ட ஒரு திட்டம், இது நிறைவடைய இரண்டு அல்லது 3 ஆண்டுகள் ஆகும். பொறுமை அவசியம் என்றார் ப.சிதம்பரம்.

வெப்துனியாவைப் படிக்கவும்