அமர்நாத் யாத்திரைக்கு முழு பாதுகாப்பு - உமர்

சனி, 30 மே 2009 (11:36 IST)
அமர்நாத் குகைக்கோயிலில் பனிலிங்கத்தை இந்த ஆண்டு தரிசிக்கச் செல்லும் யாத்ரிகர்களுக்கு தேவையான பாதுகாப்பு அளிக்கப்படும் என்று ஜம்மு-காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா கூறியிருக்கிறார்.

இந்த ஆண்டு அமர்நாத் யாத்திரை வரும் ஜூன் 15ஆம் தேதி தொடங்குகிறது.

மத்திய உள்துறை அமைச்சர் ப. சிதம்பரத்தை புதுடெல்லியில் சந்தித்த பின் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த உமர் அப்துல்லா, அமர்நாத் யாத்திரையின் போது மாநில அரசு மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்கும் என்றும், பாதுகாப்பு பலப்படுத்தப்படும் என்றும் கூறினார்.

எத்தனை நாட்கள் இந்த யாத்திரை இருக்கும் என்பது பற்றிய முடிவை மத்திய அரசோ மாநில அரசோ எடுக்க முடியாது என்றும், அமர்நாத் குகைக்கோயில் வாரியம் தான் அதுபற்றி அறிவிக்க முடியும் என்றும் கூறினார்.

மோசமான வானிலை காரணமாக யாத்திரை ஏற்கனவே ஒருவாரம் தாமதமாகியுள்ளதாகக் கூறிய அவர், ராணுவத்தினர் உள்ளிட்ட பாதுகாப்புப் படையினர் நிறுத்தப்படுவதும் தாமதமாகியுள்ளது. அதுபற்றி பரிசீலிக்கப்படும் என்றார்.

அமர்நாத் செல்லும் பாதையில் கூடாரம் அமைத்தல், மருத்துவ முகாம்கள் மற்றும் சமையலறைக் கூடங்கள் ஏற்படுத்துதல் போன்ற பணிகள் நடைபெறுவதாகவும், மின்சாரம், தண்ணீர் சப்ள்ளை, தொலத்தொடர்பு நெட்வொர்க் போன்றவையும் ஏற்படுத்தப்பட்டு வருவதாக அரசு வட்டாரங்களை மேற்கோள்காட்டி பிடிஐ செய்தி தெரிவிக்கிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்