கவுக‌ா‌த்‌தி‌யி‌ல் வெடிகு‌ண்டு க‌ண்டு‌பிடி‌ப்பு

செவ்வாய், 30 டிசம்பர் 2008 (17:17 IST)
அசா‌மதலைநக‌ர் கவுகா‌‌த்‌தி‌ அருகே குடி‌யிரு‌ப்‌பு- ச‌ந்தை‌ப் பகு‌‌தி‌யி‌ல் வை‌க்க‌ப்ப‌ட்டிரு‌ந்த வெடிகு‌ண்டு க‌‌ண்டு‌பிடி‌க்க‌ப்ப‌ட்டு செய‌லிழ‌க்க‌ப்ப‌ட்டது. இதனா‌ல் பெரு‌ம் சேத‌ம் த‌வி‌ர்‌க்க‌ப்ப‌ட்டது.

ஹ‌ட்டிகோ‌னஎ‌ன்ற பகு‌தி‌யி‌ல் உ‌ள்ள குடி‌யிரு‌ப்பு பகு‌தி‌‌யி‌ல் கே‌‌ட்பார‌ற்று ஒரு ம‌ர்ம பை ‌கிட‌‌ப்பதை‌க் க‌ண்ட அ‌ப்பகு‌தி ம‌க்க‌ள் இது கு‌றி‌த்து காவ‌ல்துறை‌யின‌ரு‌க்கு தகவ‌ல் தெ‌ரி‌வி‌த்தன‌ர்.

இதையடு‌த்து அ‌ங்கு ‌விரை‌ந்த காவ‌ல்துறை‌யின‌ர், வெடிகு‌ண்டு சோதனை ‌நிபுண‌ர்களுட‌ன் அ‌ந்த பையை ஆரா‌ய்‌ந்தன‌ர்.

பி‌ன்ன‌ர் அ‌தி‌ல் வெடிகு‌ண்டு இரு‌ப்பது க‌ண்டு‌பிடி‌க்க‌ப்ப‌ட்டு செய‌ல் இழ‌க்க‌‌‌ச் செ‌ய்தன‌ர். இதனா‌ல் அ‌ப்பகு‌தி‌யி‌ல் ஏ‌ற்பட இரு‌ந்த பெரு‌ம் சேத‌ம் த‌வி‌ர்‌க்க‌ப்ப‌ட்டது.

இத‌ற்கு‌ எ‌ந்த‌ ‌தீ‌விரவாத இய‌க்கமு‌ம் இதுவரை பொறு‌ப்பே‌ற்க‌‌வி‌ல்லை. கட‌ந்த ‌சில வார‌ங்களாகவே ஆ‌ங்கா‌ங்கே வெடிகு‌ண்டு வை‌த்‌திரு‌ப்பதாக தவறான தொலைபே‌சி அழை‌ப்புக‌ள் தொட‌ர்‌ந்து வ‌ந்து கொ‌ண்டிரு‌ப்பதாக காவ‌ல்துறை அ‌‌திகா‌ரி ஒருவ‌ர் தெ‌ரி‌வி‌த்தார்.

வெப்துனியாவைப் படிக்கவும்