ஜம்மு-காஷ்மீரில் வாக்கு எண்ணிக்கை துவங்கியது

ஞாயிறு, 28 டிசம்பர் 2008 (10:34 IST)
ஜம்மு-காஷ்மீர் சட்டப்பேரவைக்கு ஏழு கட்டங்களாக நடந்த வாக்குப்பதிவில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி இன்று காலை பலத்த பாதுகாப்புடன் துவங்கி பரபரப்பாக நடந்து வருகிறது.

அம்மாநிலத்தில் மொத்தமுள்ள 87 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்களில் பதிவான வாக்குகளை எண்ணுவதற்கு 22 மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. அனைத்து மையங்களிலும் காலை 9 மணியளவில் வாக்கு எண்ணிக்கை துவங்கியது. இன்று மாலைக்குள் அனைத்து தொகுதியின் முடிவுகளும் அறிவிக்கப்பட்டுவிடும்.

அம்மாநில முன்னாள் முதல்வர்கள் குலாம் நபி ஆசாத், முஃப்தி முகமது சயீத், ஃபரூக் அப்துல்லா மற்றும் தேசிய மாநாட்டுக் கட்சியின் தலைவர் ஒமர் அப்துல்லா, மக்கள் ஜனநாயகக் கட்சித் (பி.டி.பி) தலைவர் மெஹ்பூபா முஃப்தி ஆகியோரது வெற்றி-தோல்வி இன்று நிர்ணயிக்கப்பட உள்ளது.

இன்று காலை 10.30 மணி நிலவரப்படி காங்கிரஸ்-6 தொகுதிகளிலும், பி.டி.பி-9 தொகுதிகளிலும், தேசிய மாநாட்டுக் கட்சி-5 தொகுதிகளிலும், பா.ஜ.க.-6 தொகுதிகளிலும், இதர கட்சி மற்றும் சுயேச்சைகள்-4 இடங்களிலும் முன்னணியில் உள்ளனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்