இந்தியர்கள் பாகிஸ்தான் செல்வதை தவிர்க்க வேண்டும்: அயலுறவு அமைச்சகம்
சனி, 27 டிசம்பர் 2008 (12:18 IST)
பாகிஸ்தான் செல்வதைத் இந்தியப் பிரஜைகள் தவிர்க்க வேண்டும் என அயலுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
மும்பை மீதான பயங்கரவாதத் தாக்குதலைத் தொடர்ந்து, இந்தியா-பாகிஸ்தான் இடையே போர்ப் பதற்றம் அதிகரித்துள்ளது. இந்நிலையில், லாகூரில் நிகழ்ந்த குண்டுவெடிப்புக்கு தொடர்பாக இந்தியர்கள் சிலரை பாகிஸ்தான் அரசு கைது செய்துள்ளதைத் தொடர்ந்து இரு நாடுகளுக்கு இடையே நிலைமை மேலும் சிக்கல் ஆகியது.
இதுகுறித்து கருத்துத் தெரிவித்த அயலுறவுத்துறை இணையமைச்சர் ஆனந்த் சர்மா, இந்த நடவடிக்கை உள்நோக்கம் உடையது. எனவே, இந்தியர்கள் பாகிஸ்தான் செல்வதைத் தவிர்க்க வேண்டும் எனக் கேட்டுக் கொண்டார்.